தமிழகம்

தமிழகத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 1,520 ஆனது

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 43 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

*தமிழகத்தில் நேற்றுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7ஆயிரத்து 193 பேர்.

* 28 நாட்கள் தனிமைப்படுத்துதலை பூர்த்தி செய்தவர்கள் 87ஆயிரத்து159 பேர்.

*தற்போது தனிமையில் இருப்பவர்கள் 20 ஆயிரத்து 619 பேர்.

* அரசு கண்காணிப்பில் இருப்பவர்கள் 145 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட சாம்பிள் 46975.

* சாம்பிள் எடுக்கப்பட்ட தனி நபர்கள் எண்ணிக்கை 41710.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 6109 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 43.

* நேற்று வரை தொற்று உறுதியானவர்கள் மொத்த எண்ணிக்கை 1477.

* இன்றைய மொத்த எண்ணிக்கை 1520.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 46 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 457 பேர்.

* இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2. மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவன அலுவலர்கள் நேற்று நமது மருத்துவமனைகளைப் பார்வையிட்டனர். சரியான நிலையில் உள்ளன என்று அவர்கள் பாராட்டியுள்ளனர்.

அறிகுறி இல்லாதவர்களுக்கும் டெஸ்ட் செய்கிறோம். யாருக்கு எடுக்கவேண்டும், தொடர்பில் உள்ளவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து எடுக்கிறோம். வெளிமாநில மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களில் 618 பேருக்கு பாசிட்டிவ். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 616 பேர் என மொத்தம் 1279 பேருக்கு பாசிட்டிவ். மற்றவர்கள் என்று பார்த்தால் 198 பேருக்கு கரோனா தொற்று வந்துள்ளது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று வந்துள்ளது, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்த 3 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. எம்.பி.க்கு நெகட்டிவ். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 6000 சோதனைக்கு மேல் செய்யக்கூடிய அளவுக்கு நமது பணி அதிகரித்துள்ளது. ரேபிட் டெஸ்ட் தொடர்ச்சியாக அனைவருக்கும் செய்யக்கூடிய ஒன்று. அதில் அதிகம் பாசிட்டிவ் வந்தால் சமுதாயப் பரவல் என்று அர்த்தம். இதுவரை நாம் இரண்டாம் கட்டத்தில்தான் இருக்கிறோம். சமுதாய பரவல் இல்லை”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT