சென்னையில் நேற்று நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் 2012, 2013, 2014-ம் ஆண்டுகளுக்கான சந்த் கபீர் விருதுகளையும், தேசிய விருதுகளையும் பிரதமர் மோடி வழங்கினார். தமிழகத்தில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் வி.சுந்தரராஜன் உட்பட தேசிய அளவில் 16 பேருக்கு சந்த் கபீர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.6 லட்சம் ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம், பாராட்டுச்சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் கே.ஜெயந்தி, வி.பழனிச்சாமி உட்பட தேசிய அளவில் 58 பேருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டன. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.