தமிழகம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மதுவிலக்கு கோரி திமுக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மதுவிலக்கை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும், உடனடியாக மதுவிலக்கை நடை முறைக்கு கொண்டு வர வலியு றுத்தியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒருபகுதியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதன்படி, சென்னையில் திமுகவின் அமைப்பு ரீதியான 4 மாவட்டங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தென் சென்னை மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டா லின் பங்கேற்று பேசினார்.

அதேபோல், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலை மையில், சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப் பாட்டத்தில், திமுக எம்.பி.யும் மகளிரணி செயலாளருமான கனிமொழி பங்கேற்றார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.

வட சென்னை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மாத வரம் சுதர்சனம் தலைமையில் மாத வரம் பஜார் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திமுகவின் இந்த ஆர்ப்பாட்டங் களில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகளில் நேற்று காலை விற்பனை மிகக் குறை வாகவே இருந்தது. காந்தியவாதி சசிபெருமாள் மரணத்துக்கு ஆர்ப் பாட்டம் நடந்த அனைத்து இடங் களிலும் திமுகவினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடந்த போராட் டத்துக்கு திமுக தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் தலைமை தாங் கினார். போராட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

திருவள்ளூர்

திருவள்ளூர், பொன்னேரி, மாதவரம் ஆகிய 3 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளூரில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சா.மு. நாசர், முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். பொன் னேரியில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு, சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT