தமிழகம்

என்னை ஏஜென்டாக்கியதே பேராசிரியர்தான்..

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ்' நாளிதழ் வெளி யான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. ராமநாத புரம் முகவர் ச.காளீஸ்வரன் பேசு கிறார்...

"எல்லா வாசகர்களும், ஏன் என் வீட்டுக்குப் பேப்பர் வரலன்னு கேட் கிறதோட சரி. ஆனா, பத்திரிகை ஆபீஸ் வரைக்கும் பேசி, ‘ஓ... ஏஜென்ட் இல்லாததுதான் பிரச்சினையா? நானே ஏற்பாடு பண்றேன்'னு சொல்லி என்னை ஏஜென்டாக்கினாரு பேராசிரியர் மை.அப்துல் சலாலுதீன். இத்தனைக்கும் எங்க வம்சத்துலேயே யாரும் பத்திரிகை ஏஜென் டாக இருந்ததில்லை.

‘இந்து நல்ல நாளிதழ்பா... பொறியியல் படிச்ச உன்ன மாதிரி சுறுசுறுப்பான ஆள்தான் இந்தத் தொழிலுக்குச் சரி'ன்னு சேர்த்து விட்டாரு. நீண்டகால தமிழ்ப்பேராசிரியர், ராமநாதபுரம் தமிழ்ச்சங்க தலைவருங்கிற முறையில, பல கூட்டங்களில் கலந்துகொண்டு மறக்காம ‘இந்து தமிழ்' வாங்க வேண்டியதன் அவசியத்தை விளக்குவார். ‘நம்ம பிள்ளைங்களுக்கு அறிவுப் புகட்டணுமா..? தமிழ் இலக்கியத் தையும் புதிய புதிய நூல்களையும் அறிமுகப்படுத்தணுமா.. ? இந்து தமிழ் வாங்குங்க' என தனது மாணவர்களிடம் வற்புறுத்துவாரு.

ஆரம்ப காலத்துல நம்ம நாளிதழையே கூட்டங்களில் கொண்டுபோய் காட்டுவாராம். இப்பவும் காலையில தொழுகை முடிஞ்சதும் இந்து தமிழ் நாளிதழைத் தான் தேடுவார். இஸ்லாமியரா இருந்தாலும்கூட, இந்து வெளியிடுற, சித்திரை மலர், தீபாவளி மலர், ஆடி சிறப்பிதழ், ராமானுஜர் என்று அத்தனை புத்தகங்களையும் தவறாம வாங்குவார். அவரோட மனைவியும் ஆசிரியர்தான். அவங்களும் ரொம்ப ஆர்வமா நாளிதழ் படிப்பாங்க.

எப்பவுமே இந்து தமிழ் புகழ்பாடுற ஐயா, ‘என்ன, இந்த நேரத்துல பக்கத்தைக் குறைச்சிட்டீங்க? என்ன ரெண்டு வாரமா காமதேனுவும் வரல. காசைக் கூட ஏத்திக்கோங்க பக்கத்தைக் குறைக்காதீங்க. செய்தி கிடைக்காட்டி பழைய கட்டுரையைக்கூட மறு பதிப்பு செய்யுங்க..'ன்னு சொல்லிட்டே இருக்காரு.

‘ஊரடங்கு வரைக்கும்தான் சார். அப்புறம் பாருங்க, புதிய புதிய சிந்தனைகளோட இந்து தமிழ் தனித்துவமாக வெளிவரும்னு சொல்லியிருக்கேன்.”

SCROLL FOR NEXT