தமிழகம்

கரோனா உறுதி பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை போலீஸ்

செய்திப்பிரிவு

சனிக்கிழமை மாலை சென்னை அரசு மருத்துவமனையில் 52 வயது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோவிட்-19 உறுதி டெஸ்ட்டுக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சாலையில் வாகன சோதனைகளில் ஈடுபடும் போலீஸார் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவர் எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் ஆலந்தூரில் போலீஸ் குவார்ட்டர்ஸில் வசித்து வந்தார், சாலையில் கரோனா லாக்-டவுன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். இவரது சளி மாதிரி முன்னதாக கோவிட்-19 பாசிட்டிவ் என்று தெரிவித்தது. ஆனால் அவருக்கு கரோனா நோய்க்குறி குணங்கள் எதுவும் இல்லை.

இவர் தற்போது கரோனா உறுதி டெஸ்ட்டுக்காக சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து எஸ்பளனேடு போலீஸ் நிலையத்தில் இவரது சக பணியாளர்கள், போலீஸ் குவார்ட்டர்ஸில் உள்ளோர் சாம்பிள்கள் டெஸ்ட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

ரோந்து போலீஸ் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிளனேடு ஸ்டேஷன் மற்றும் குவார்ட்டர்ஸ் முழுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மொத்தம் 150 போலீஸ் சாலை சோதனை செக் பாயிண்டுகள் உள்ளன, இங்கு பணியாற்றுபவர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT