பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

குடும்ப வன்முறை புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்: மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு

கி.மகாராஜன்

குடும்ப வன்முறை புகார்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நசிமா பானு இன்று (ஏப்.19) விடுத்துள்ள அறிக்கை:

"ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடும்ப வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை, முதியோர்களுக்கான அவசர உதவி தொடர்பான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்புகார் தொடர்பான அவசர உதவிக்கு சார்பு நீதிபதி/ செயலரின் வாட்ஸ் அப் எண்- 9488237478, அவசர உதவி தொலைபேசி எண்- 9486229149 (ஓஎஸ்சி), பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி எண்- 9942656138, குழந்தை பாதுகாப்பு அதிகாரியின் தொலைபேசி எண்களில் (8300009991, 8300071495, 8300006625) தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்களில் பெயர், வயது, பாலினம் மற்றும் குறைகள், வன்முறைக்கு ஆட்படுதல் அல்லது மற்றவரால் துன்புறுத்தப்படுதல் போன்ற புகாரையும், சம்பந்தப்பட்ட எதிரி, அவரது பெயர், வயது, பாலினம் ஆகிய தகவல்களை அனுப்ப வேண்டும்.

இந்தப் புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆன்லைனில் குடும்ப ஆலோசனை வழங்கப்படும்".

இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT