ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கிராமம் ஒன்றில் குக்கரில் சாராயம் காய்ச்சியதாக புகார் எழுந்ததையடுத்து போலீஸார் விரைய தாய், மகன்கள் மூவரும் தப்பியோடினர்.
சந்திரசேகர் மனைவி விமலா, இவர் தனது இருமகன்களுடன் சேர்ந்து வீட்டிலேயே குக்கரில் சாராயம் காய்ச்சி வந்ததாக புகார் எழுந்தது. தகலறிந்த போலிசார் அங்கு சென்றனர்.
சோதனை நடத்தியதில் அங்கு 30 லிட்டர் கேன்களில் சாராயம் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சாராயம் காய்ச்ச பயன்பட்ட குக்கர் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றைக் கைப்பற்றிய போலீஸார், தப்பியோடிய தாய் மற்றும் இருமகன்களைத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.