ஊரடங்கு உத்தரவு மற்றும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியுடன் 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமண நிகழ்ச்சி ராஜபாளையத்தில் இன்று காலை நடைபெற்றது.
உலகையே கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே 3-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சியில் குறைந்த அளவு மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ராஜபாளையம் வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த சுமதி என்பவருக்கும் , ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கட் என்பவருக்கும் எளிய முறையில் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. ம
ணமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சேனிடை சர் மூலம் கை கழுவியும், மாஸ்க் அணிந்தும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.