கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் மதன்குமார். இவர், கோவை கிருஷ்ணா தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார்.
தற்போது வீடுகளில் தனிமைப் படுத்தி கண்காணிக்கப்படும் நபர் களுக்கு, அவர்கள் இருக்கும் அறைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்காக இயந்திரம் ஒன்றை தயாரித்து ள்ளார்.
இதுகுறித்து அவர் கூறி யதாவது: இந்த இயந்திரத்தை நமது செல்போனில் உள்ள BLYNK APP உதவியுடன் இயக்க முடியும்.
இந்த இயந்திரம் மூலம் 3 முதல் 4 கிலோ எடை உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். தயாரிப்பு செலவு ரூ.1,500 மட்டுமே. அரசு உதவி செய்தால் இந்த இயந்திரத்தை சமதளம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் இயங் கும் வகையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி மேம்படுத்த முடியும் என்றார். சு.கோமதிவிநாயகம்