கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை மற்றும் மொத்த விற்பனை இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் ஆகியன நாளை (ஏப்.19) செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருச்சி மாநகரில் 10 இடங்களில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தைகள் ஏப்.18, 19 ஆகிய தேதிகளில் செயல்படாது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் நாளை (ஏப்.19) மட்டும் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்படாது. திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் இயங்கிவரும் மொத்த காய்கறி விற்பனை சந்தை ஏப்.17, 18 ஆகிய 2 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்வதுடன், கடை உரிமை யாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை ஆட்சியர் சு.சிவராசு தெரி வித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகத் தால் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள 3 கிருமி நாசினி இயந்திரங்களின் செயல்பாட்டை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆட்சியர் சு.சிவராசு நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.