குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் பூர்வாசிரம தந்தையார் சுப்பிரமணியன் இன்று (வெள்ளிக் கிழமை) மாலை மதுரையில் காலமானார்.
82 வயதான சுப்பிரமணியன் சர்க்கரை நோய்க்காக காலில் அறுவைச் சிகிச்சை செய்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
குன்றக்குடி ஆதீனத்தின் மதுரை கிளைக்கான கவுரவ முகவராக இருந்து வந்தவர் சுப்பிரமணியன். அவருக்கு குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் உட்பட மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
மனைவி முத்துலெட்சுமி ஏற்கெனவே காலமாகிவிட்ட நிலையில், மதுரை தெற்காவணி மூலவீதியில் வசித்துவந்தார் சுப்பிரமணியன். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று (வெள்ளிக் கிழமை) மாலை அவர் காலமானார்.
இவரது இறுதிச் சடங்குகள் நாளை (சனிக்கிழமை) காலையில் மதுரையில் நடக்கின்றன.