தமிழகம்

கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ; அரியவகை மரங்கள் கருகின

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அரியவகை மரங்கள் கருகின. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்துவருகிறது. சில தினங்களுக்கு பட்டா நிலங்களில் பற்றிய தீ வனப்பகுதிக்கும் பரவியது. வனப்பகுதிகளில் தீ பரவ காரணமான ஒருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்

இந்நிலையில் நேற்று இரவு கொடைக்கானல்- வத்தலகுண்டு சாலையில் பெருமாள்மலை அருகே கரடிக்கல் என்ற வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.

இதனால் அரியவகை மரங்கள் எரிந்தன. செடிகள், புற்கள் என வனப்பகுதியில் இருந்த தாவரங்கள் தீயில் கருகி அழிந்தன. இப்பகுதியில் இருந்த வனவிலங்குகளும் தீ பரவியதன் காரணமாக வேறுபகுதிக்கு இடம்பெயர்ந்தன.

கரடிக்கல் வனப்பகுதியில் 500 க்கும்மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனைகட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிரமுயற்சியில் ஈடுபட்டனர்.

இரவு முழுவதும் பற்றி எரிந்த தீயால் கரடிக்கல் வனப்பகுதி முழுவதும் இன்று காலை வரை புகைமண்டலமாக காட்சியளித்தது. தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT