கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டப் பணிக்காக கண்ணன்கோட்டை யில் நிலம் கையகப்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னை மக்களுக்கு தடை யின்றி குடிநீர் விநியோகிக்க, கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை தேக்கி வைக்க திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், கண்ணன்கோட்டை - தேர்வாய் ஏரிகளை இணைத்து, நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
கண்ணன்கோட்டை, தேர்வாய், கரடிப்புத்தூர் பகுதிகளில் நீர்த்தேக் கம் அமைக்கும் பணிக்காக அரசு மற்றும் வனத்துறை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நீர்த் தேக்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இச்சூழலில், நீர்த்தேக்கத்துக் காக கையகப்படுத்த முடிவு செய் யப்பட்ட 800 .65 ஏக்கர் விவசாய நிலங்களின் உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் இடைக்கால நிவார ணம் பெற்றுள்ளனர். மற்றொரு தரப்பினரின் இடைக்கால நிவார ணம், பல்வேறு காரணங்களால் வருவாய்த்துறை வசம் மற்றும் சிவில் கோர்ட் டெபாசிட்டில் உள்ளது.
சிவில் கோர்ட் டெபாசிட்டில் உள்ள 250 ஏக்கருக்கு மேலான நிலங்களின் உரிமையாளர்களுக்கு இடைக்கால நிவாரணத்தை, லோக் அதாலத் சிறப்பு நீதிமன்ற முகாம் நடத்தி வழங்குவதற்கான நடவடிக் கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், விளைநிலங் கள் கையகப்படுத்துவது தொடர் பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், நீர்த் தேக்கத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா, ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை கண்ணன்கோட்டை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நீர்த்தேக்கத் திட்டத்துக்கு விளைநிலங் களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கண்ணன் கோட்டையில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டம், நீர்த்தேக்கத் திட்டத்துக்கு கையகப்படுத்த அரசு திட்டமிட்ட விவசாய நிலங்களில் நடந்தது. இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் துளசி நாராயணன், வட்ட தலைவர் ரவிக்குமார், கண்ணன் கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் முனியம்மாள் உட்பட 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின்போது, ‘தங்களுக்கு வாழ்வு அளிக்கும் விவசாய நிலத்தை அரசு கையகப் படுத்த விடமாட்டோம்’ என்று உறுதி மொழியேற்றனர்.