கரோனா தொற்று தடுப்பு குறித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது 
தமிழகம்

வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் தகவல் அளிக்காதவரை கண்டறிந்து பரிசோதனை- ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு

செய்திப்பிரிவு

வெளி மாநிலங்கள், மாவட்டங் களில் இருந்து ஊர் திரும்பி அரசுக்கு தகவல் அளிக்காமல் தங்கியுள்ளவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை மேற் கொள்வதென தருமபுரியில் நடந்த ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கரோனா தொற்று தடுப்பு குறித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களுக்கான கரோனா சிறப்பு கண்காணிப்புக் குழு அலுவலர்கள் தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஸ்குமார், தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் மஞ்சுநாதா, தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பி, அரசுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் யாரேனும் தங்கி உள்ளார்களா என்பது குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு யாரேனும் தங்கியிருப்பது தெரிய வந்தால் அவர்களை தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தி மருத் துவக் கண்காணிப்பில் வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பணிகள் இன்று (16-ம் தேதி) முதல் தருமபுரி மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்படஉள்ளது.

SCROLL FOR NEXT