தமிழகம்

மயிலாடுதுறையில் முதல்முறையாக 7 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

செய்திப்பிரிவு

நாகை மாவட்டத்தில் நேற்று வரை 31 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், மயிலாடுதுறையில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற மயிலாடு துறையைச் சேர்ந்த 11 பேர் தாமாக முன்வந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 7 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 4 பேர் தொற்று இல் லாததால், அவரவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 12 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், இங்கு சிகிச்சை பெற்று வரும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய அம்மாப்பேட்டையைச் சேர்ந்த 58 வயது முதியவரின் 28 வயதான மகன், 21 வயதான மருமகள், 8 மாத பேத்தி ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப் பட்டது.

இதேபோல, டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய, தொற்றுடன் சிகிச்சையில் உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரின் மகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT