தமிழகம்

காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு, நிவாரணப் பணிகள் குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சிமூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஏப்ரல் 15-ம் தேதி காலை 10மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கூட்டம் நடத்தபோலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து இன்று காலை11 மணிக்கு காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘கரோனா நோய்த் தடுப்பு பணிகள்நடந்து கொண்டிருக்கும் இந்தநேரத்தில் அதிமுகவைப் போலஅரசியல் செய்ய திமுக விரும்பவில்லை. தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஏப். 16-ம் தேதி (இன்று)காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படும்’’ என்று கூறியுள்ளார்.

இதில் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் அவரவர் வீடு, அலுவலகங்களில் இருந்து காணொலி மூலம் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT