திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 56 பேர், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 5 பேர், தென்காசி மாவட்டத்திலிருந்து 8 பேர் என்று மொத்தம் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்குமுன் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சேர்ந்த 18 பேர் குணடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்குமுன் இவர்களது சளி, ரத்த மாதிரிகள் இரு கட்டமாக எடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
அதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து, அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த 18 பேரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.