தமிழகம்

ஊர்க்காவல்படை வீரர்கள் 4 பேருக்கு பெட்ரோல் திருடியதாக சிறை

செய்திப்பிரிவு

பரமக்குடி பகுதியில் ஊரடங்கை மீறிய மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து நகர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

சில மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் திருடப்பட்டு, அதன் உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. அதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஊர்க்காவல் படையினர் மேலாய்க்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி(23), கஞ்சியேந்தலைச் சேர்ந்த தியாகராஜன்(24), எம்.நெடுங்குளத்தைச் சேர்ந்த சக்திமோகன்(22), பொதுவக்குடியைச் சேர்ந்த விக்னேஷ்குமார்(24) ஆகிய 4 பேர் திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து இவர்களை போலீஸார் கைது செய்து பரமக்குடி கிளைச் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT