தமிழகம்

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வாரத்துக்கு 2 நாட்கள் வெளியே வர அனுமதி: தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முதல் அமல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (ஏப்.16) முதல் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வாரத்துக்கு இரு நாட்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்படும் என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, ஏப்.16 (நாளை) முதல் ஊரடங்கு முடிவடையும் வரை பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க குடும்பத்தில் ஒருவருக்கு வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதி வழங் கப்படும்.

இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தற்போது 3 வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இதில் பச்சை வண்ண அட்டை வைத்திருப்போர் திங்கள், வியாழக் கிழமையும், நீலநிற அட்டை வைத்திருப்போர் செவ்வாய், வெள்ளிக்கிழமையும், பிங்க் நிற அட்டை வைத்திருப்போர் புதன், சனிக்கிழமையும் அனுமதிக்கப் படுவர். ஞாயிற்றுக்கிழமை யாருக் கும் அனுமதி இல்லை.

அன்றைய தினம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். இந்த அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை வெளியே வரலாம். பொதுமக்கள் வெளியே வரும் போது, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அடையாள அட்டை வைத்திருப்போர் 
காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை வெளியே வரலாம். பொதுமக்கள் வெளியே வரும் போது, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்

SCROLL FOR NEXT