கரோனா தடுப்பு நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று திருச்சி மாநகராட்சி களப் பணியாளர்கள் மற்றும் மருத்து வக் குழுவினர் வேதனை தெரி விக்கின்றனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காவல், சுகாதாரம், ஊரக உள் ளாட்சித் துறைகளுடன் இணைந்து நோய் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை திருச்சி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உட்பட இதுவரை 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இவர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் கரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 43 பேரின் குடியிருப்புகள் அமைந்துள்ள 20 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 9 பகுதிகள் மாநகரில் அமைந்துள் ளன.
மாநகரில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேரின் வீடுகள் அமைந்துள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினமும் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக தலா ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள் அடங்கிய 18 மருத்துவக் குழு, களப்பணியாளர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுதோறும் ஆய்வில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறி யது: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மருத் துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வர்கள் அனைவரையும் மருத் துவ பரிசோதனைக்கு உட் படுத்திவிட்டோம். தொடர்ந்து, கரோனா சமூக பரவலாகி விடாமல் தடுக்கும் வகையில் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று அங்குள்ளவர்களை பரிசோதனை செய்ய சென்றால், பொதுமக்கள் பலர் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட மறுக்கின்றனர்.
மேலும், கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கூட கடைபிடிக்காமல் அலட்சியமா கவே உள்ளனர். குறிப்பாக, இளை ஞர்கள் முகக்கவசம் அணியாமல், ஒன்றாக அமர்ந்து அரட்டையிலும் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக் காதது வேதனை அளிக்கிறது. எனவே, கரோனா சமூக பரவல் ஏற்படுவதை தடுக்க கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து ரோந்து செல்ல வேண்டும் என்றனர்.