தமிழகம்

முதியோரின் வீடுகளுக்கே சென்று உதவித் தொகை விநியோகம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

செய்திப்பிரிவு

வங்கிகளுக்கு முதியவர்கள் வருவதை தவிர்க்க, அவர்களது வீடுகளுக்கே சென்று முகவர்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, முகவர்கள் மூலம் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று உதவித் தொகையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் கூட்டம் சேர்வதை தவிர்க்கவே, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதேபோல, பயோமெட்ரிக் பதிவும் தடை செய்யப்பட்டு, கையெழுத்து மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இதுகுறித்து அறிக்கை, தண்டோரா வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அரசு அமைத்த 12 குழுக் களில் தன்னார்வலர்களை ஒருங் கிணைப்பதற்கான குழுவும் உள்ளது. தற்போது, 2,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 58 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

இயற்கை பேரிடருக்கும், இந்த பேரிடருக்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தாகும் சூழல் இருப்பதால், பாதுகாப்பை கடைபிடிப்பது அவசியம். எனவே, யாராக இருந்தாலும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து, அவர்களது வழிகாட்டுதல்களை பின்பற்றி உதவி செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT