தமிழகம்

ஸ்டாலின் குறித்த புத்தகம் கருணாநிதி வெளியிட்டார்

செய்திப்பிரிவு

மு.க.ஸ்டாலின் குறித்து எழுதப்பட்ட ‘திராவிடத்தில் ஒரு ஸ்டாலின்’ என்ற புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.

திருநெல்வேலி மாநகராட் சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலினைப் பற்றி ‘திராவிடத்தில் ஒரு ஸ்டாலின்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை பற்றிய தகவல்களும் குறிப்புகளும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்தில் நேற்று காலை வெளியிட்டார்.

முதல் பிரதி

முதல் பிரதியை திருநெல் வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் பெற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT