காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கண்ணாடி கூண்டுக்குள் இருந்தவாறு பரிசோதனைக்கான மாதிரி எடுக்கும் மருத்துவக் குழுவினர். 
தமிழகம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கண்ணாடிக் கூண்டில் இருந்தவாறு சளி மாதிரி எடுக்கும் மருத்துவ ஊழியர்கள்

செய்திப்பிரிவு

காரைக்கால் அரசு பொது மருத்து வமனையில் கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களிடம், கண்ணாடிக் கூண்டில் இருந்தவாறு சளி, உமிழ் நீர் மாதிரியை எடுக்கும் பணியை மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர் களிடமிருந்த சளி, உமிழ்நீர் மாதிரிகளை எடுக்க வழக்கமான பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலை யில், தற்போது இதற்காக மருத்து வமனையில் 2 இடங்களில் கண்ணாடிக் கூண்டு அமைக் கப்பட்டுள்ளது. அதனுள் இருக் கும் மருத்துவக் குழுவினர், பரிசோதனை மேற்கொள்ளப் படுபவரின் சளி, உமிழ் நீர் மாதிரிகளை எடுக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறியது: கண்ணாடி கூண்டுக்குள் பரிசோதனைக் குழுவினர் உரிய பாதுகாப்பு ஆடையுடன் இப்பணியில் ஈடு படுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 250 பேருக்கு பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டுள்ளது என் றனர்.

SCROLL FOR NEXT