படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

கரோனாவும் - கருப்புசாமியும்: மதுரையில் மக்களைக் கவர்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம்

கி.மகாராஜன்

மதுரையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் நடத்திய ‘கரோனாவும்- கருப்புசாமியும்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்களைக் கவர்ந்தது.

கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

மதுரை கல்லூரி மைதானத்தில் காய்கறி வந்தவர்களிடம் மாவட்ட ஆட்சியர் வினய் ஏற்பாட்டின் பேரில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கரேனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் மதுரை கோவிந்தராஜ் தலைமையில் பிரசன்னா, பிரகாஷ், அருண்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் கூட்டமாக நிற்கும் மக்களை நோக்கி கரோனா கிருமி நகரும்போது, அங்கு கருப்புசாமி வந்து மக்களை சமூக விலகலை கடைிபிடித்து விலகி நிற்குமாறு வலியுறுத்துவதும், மக்கள் சமூக விலகலை கடைபிடித்து நிற்கும் போது கரோனா கிருமி மக்களை நோக்கி செல்வதில் பின்வாங்குவதையும், இறுதியில் கரோனா கிருமியை கருப்புசாமி அரிவாளால் வெட்டி சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகளை நடித்துக் காண்பித்தனர்.

பறையிசை, மரக்கால் ஆட்டமும் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காய்கறி வாங்க வந்தவர்களையும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரையும் வெகுவாகக் கவர்ந்தது.

SCROLL FOR NEXT