திருநெல்வேலி அருகே வட்டார காங்கிரஸ் தலைவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட் டார்.
செங்கோட்டை அருகே அச்சன் புதூர் மணக்காடு தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால்(43). செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் அச்சன்புதூர் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை கடத்திச் சென்றது. நேற்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. அச்சன்புதூர் காவல்நிலையத்தில் அவரது மனைவி லட்சுமி புகார் செய்தார். ராஜகோபாலை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பாளையங் கோட்டை அருகே உள்ள முடிக் குளத்தின் கரையில் தலை துண்டிக்கப்பட்டு, உடல் தீயிட்டு ஆண் சடலம் ஒன்று கிடந்தது. தகவலறிந்த பாளையங் கோட்டை போலீஸார் தாழை யூத்து டிஎஸ்பி ராஜாராம் தலைமையில் ஆய்வு மேற்கொண் டனர். குளத்தின் வேறொரு பகுதி யில் கிடந்த ஒரு பையில் மதுப் பாட்டில்கள், துணிகள் இருந்தன.
தடயங்களின் அடிப்படையில், தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் ராஜகோபால் என்பது கண்டறியப்பட்டது. அவரை கடத்தி வந்து, கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.
ராஜகோபாலுக்கும், அச்சன் புதூர் தலைவன்கோட்டை பகுதி யைச் சேர்ந்த சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இதில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள். அவரது தலையை தேடும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டனர்.
மற்றொரு கொலை
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆத்தங்கரையான் மகன் துரை ஈஸ்வரன் (33). நேற்று பிற்பகல் சுத்தமல்லி விலக்கில் நின்றிருந்த அவரை, அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்தது. கொலையாளிகளை கைது செய்யக் கோரி, அவரது உறவினர்களும், அப்பகுதி மக்க ளும், சுத்தமல்லியில் திருநெல் வேலி கடையம் சாலையில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்ட னர். மாவட்ட எஸ்பி விக்கிரமன் விசாரணை மேற்கொண்டார்.