திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கண்ணாடி கூண்டுக்குள் இருப்பவரிடம் இருந்து சளி மாதிரியை சேகரிக்கும் மருத்துவர். 
தமிழகம்

கரோனா தொற்று பரவாமல் தடுக்க மருத்துவர்களுக்கு கண்ணாடி கூண்டு

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சிறப்புக் கண்ணாடிக் கூண்டு ஒன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பரிசோதனை செய்ய உள்ளவர் கண்ணாடிக் கூண்டுக்குள் இருப்பார். மருத்துவர் முழுப் பாதுகாப்பு உடையுடன் கையுறை அணிந்து வெளியே இருந்து கூண்டுக்குள் கைகளை மட்டும் விட்டு பரிசோதனை மேற்கொள்கிறார்.

ஒருவருக்கு சோதனை முடிந்து அடுத்தவருக்கு சோதனை செய்யும்போது கையுறைகள் மாற்றப்படுகின்றன. இதன் மூலம் பரிசோதனை செய்யும் மருத்துவருக்கு கரோனா தொற்று பரவுவது தடுக்கப்படும்.

SCROLL FOR NEXT