சசிபெருமாள் மரணத்தில் எந்த சந்தேகமும் எழவில்லை என, முதல்கட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தியவாதி சசிபெருமாளின் உடல் நாகர்கோவில் ஆசாரிபள் ளம் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர் ராஜேஷ் தலைமையில் மருத்துவர் ஜான்சன் உள்ளிட்ட மூவர் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அவை அனைத்தும் வீடியோ வில் பதிவு செய்யப்பட்டது.
அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் எழவில்லை என முதல் கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அவரது உடலில் இருந்து முக்கிய உறுப்புகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு ரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை கிடைத்ததும் கூடுதல் தகவல் கிடைக்கும்.