தமிழகம்

கரோனா தடுப்புக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு அரசின் எவ்வித சலுகையும் பெறாத பழங்குடி இன இளைஞர் ரூ.500 உதவி

செய்திப்பிரிவு

திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூர் அருகே உள்ள கீழ்பாதி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்தவரான ரமேஷ்(32) என்பவர், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசகர் ராஜேஷ் என்பவரை நேற்று அணுகி, கரோனா தடுப்பு பணிக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தன்னால் முடிந்த தொகை ரூ.500-ஐ அனுப்ப உதவுமாறு கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.500-ஐ ஆன்-லைன் மூலம் ரமேஷ் பெயரில் ராஜேஷ் அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

இதுகுறித்து கேட்டபோது, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஆலோசகர் ராஜேஷ் கூறியது: கீழ்பாதி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 5 குடும்பத்தினர் வசித்துவரு கின்றனர். இக்குடும்பங்களில் உள்ள சுமார் 40 பேருக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை,வாக்காளர் அட்டை எதுவும் இன்னமும் வழங்கப்படவில்லை. 3 முறைக்கு மேல் விண்ணப் பிக்கப்பட்டும் வருவாய்த் துறை நிராகரித்துள்ளது.

ஆனாலும், இக்குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள மாந்தோப்பு, பழத் தோட்டங்களுக்கு காவல் பணிக்குச் செல்வது வழக்கம். தற்போது 4 குடும்பத்தினர் அப்படி சென்றுவிட்டனர். ரமேஷ் தன் 4 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கீழ்பாதி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வசித்து வருகிறார்.

இவர், கரோனா வின்தாக்கத்தை அறிந்து தன்னால் முடிந்த ரூ.500-ஐ முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன்பேரில், அவர் அளித்த ரூ.500-ஐ அவரது பெயரில் அனுப்பி வைத்தேன் என்றார்.

SCROLL FOR NEXT