மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட 2800க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் பறிமுதலான இருசக்கர வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

சுப.ஜனநாயகச் செல்வம்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் வகையில் மதுரையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோல் ஏற்பாடுகள் செய்தும், தேவையின்றி வெளியில் வருவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மார்ச் 23-ம் தேதி முதல் இது வரை இன்று வரை 50 கார்கள் மற்றும் 2800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 1800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஆயுதப்படை மைதானம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு முடிந்தபின்னர், உரிமையாளர்களிடம் வாகனங்களை ஒப்படைப்பது தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதுவரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருடுபோகாமல் இருப்பதற்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT