திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை பெய்தது. அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலை யில், நேற்று முன்தினம் இரவு மத்திய மண்டலத்தில் பல் வேறு இடங்களிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வெயில் கொடுமையைத் தாள முடியாமல் அவதிப்பட்டு வந்த மக்கள், கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சில இடங்களில் ஐஸ் கட்டி மழைபெய்தது. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. 5 மின்மாற்றிகள் எரிந்து சேதமடைந் தன.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சேந்தமங் கலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அதே ஊரைச் சேர்ந்த விவசாயி பொப்பன்(65), அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த அழகு என்பவரது ஜல்லிக் கட்டு காளையும் இதே மின்கம்பி வழியே மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது.
இலுப்பூர் அருகே மின்னல் தாக்கியதில் கருத்தப்பவயலைச் வள்ளி என்பவரின் 8 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.