பயணி ரயில் சேவையை மீண்டும்தொடங்குவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணி ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பல ரயில்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் இருந்து பயணத்தை தொடங்குவதாகவும் அவை தெரிவிக்கின்றன.
மேற்கண்ட விஷயங்கள் குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பதையும், அதற்கு முன்னரே இவ்வாறு செய்தி வெளியிடுவது தேவையில்லாத, தற்போதைய அசாதாரண சூழலில் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுகிறது.
பொது முடக்கத்துக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை இயக்கம் குறித்து, பயணிகள் உட்பட அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சிறந்த சாத்தியமான முடிவுகளை ரயில்வே எடுக்கும். அந்தமுடிவுகள் தொடர்புடைய அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.