தமிழகம்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் இறப்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 60 வயது முதியவர் இறந்தார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 47 பேர் புதுடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தனர். இவர்கள் அனைவருக்குமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் திருப்பத்தூரைச் சேர்ந்த 2 பேர், வி.மலம்பட்டி, தேவகோட்டை, இளையான்குடியைச் சேர்ந்த தலா ஒருவர் என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதேபோல் கரோனா தொற்று இல்லாத 42 பேரும் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டியைச் சேர்ந்த 60 வயது முதியவர் திடீரென இறந்தார்.

பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT