தூத்துக்குடி குட் சாமாரிட்டன் சமூக சேவை நிறுவனம் மூலம் கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊட்டசத்து பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி வித்யபிரகாசம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் தலைமை வகித்தார்.
வட்டாட்சியர் மணிகண்டன், 12 வகையான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தலா ரூ.600 மதிப்புள்ள தொகுப்பை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
இதில், வித்யபிரகாசம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் படிக்கும் 34 பேர், கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் 16 பேர், வடக்கு திட்டங்குளம் பள்ளியில் 20 பேர், முடுக்குமீண்டான்பட்டியில் 20 பேர், செமபுதூர் பகுதியில் 15 பேர் என மொத்தம் 101 பேருக்கு ரூ.60,600 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மல்லிகா, குட் சாமாரிட்டன் சமூக சேவை நிறுவனம் செயலாளர் விஜயசிங், மேலாளர் வின்சர் டேனியல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.