தமிழகம்

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து

செய்திப்பிரிவு

மூன்றாம் பாலித்தனவரான திருநங்கைகளை மையமாகக் கொண்டு சித்திரை மாதம் உளுந் தூர்ப்பேட்டை வட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நாடு முழுவதும் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இத்திருவிழாவில் பங்கேற்பார்கள்.

இத்திருவிழாவையொட்டி, விழுப்புரம் நகரில் திருநங்கைகள் பங்கேற்கும் கலைப் போட்டிகளும் நடைபெறும். நடப்பாண்டுக்கான இத்தி ருவிழா ஏப்.21-ம் தேதி கொடி யேற்றுத்துடன் தொடங்க திட்டமி டப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள் ளதால், திருவிழா நடத்துவது தொடர்பாக திருநாவலூர் சரகத்துக்குட்பட்ட கூவாகம், நத்தம், தொட்டி, சிவலிங்ககுலம், அண்ணா நகர், பாரதி நகர், கீழ்குப்பம் வேலூர், கொரட்டூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத் தப்பட்டது.

அப்போது, கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப் பதால் இந்தாண்டு சித்திரைத் திரு விழாவை ரத்து செய்துவிட்டு, சிறிய அளவில் தேரோட்டத்தை மட்டும் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT