தமிழகம்

தேனியில் ஒரே நாளில் 16 பேருக்கு கரோனா தொற்று: 12 பேர் பெண்கள்

என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 16 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தேனி மாவட்டத்தில் நேற்று வரை 23 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. இதில் போடியில் மட்டும் 13 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் இப்பாதிப்பு இல்லாத நிலை இருந்தது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 16பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் போடியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் 12 பேர் பெண்கள்.

புதுடெல்லி நிஜாமூதீன் மாநாட்டிற்குச் சென்ற பலருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இவர்களது குடும்பத்தினர் சிலரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தன.

இதில் 16 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மாநில அளவில் இதுவரை 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேனி எட்டாவது இடத்தில் இருந்தது.

இன்றைய முடிவின்படி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநில அளவிலான பாதிப்பில் 5-வது இடத்திற்கு தேனி வந்துள்ளது.

மேலும் இத்தொற்றில் பெண்களின் எண்ணிக்கையும் இன்று உயர்ந்துள்ளது.

ஒரே ஊரில் 16 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் போடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT