தமிழகம்

அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளுக்கு தினமும் யோகா பயிற்சி

செய்திப்பிரிவு

திருச்சி உட்பட 9 மத்திய சிறை களில் கைதிகளுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் புழல்-1, புழல்-2, வேலூர், கடலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 9 இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. இவற்றில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்த சிறைத் துறை தலைவரும், ஏடிஜிபியுமான திரிபாதி திட்டமிட்டார்.

தனியார் யோகா பயிற்சி மையங்களுடன் இணைந்து இதனை தொடர்ச்சியாக செயல் படுத்துவதில் நிர்வாக பிரச்சி னைகள் இருந்தன. எனவே, ஒவ்வொரு மத்திய சிறையில் இருந்தும் 2 சிறைக்காவலர்கள், 2 கைதிகள் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களுக்கு கடந்த மாதம் 16-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை புழல்-1 சிறை வளாகத்தில் வாழும்கலை யோகா மையத்தினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்கள் மூலம் அனைத்து சிறைகளிலும் தண்டனை, விசார ணைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கான வகுப்பு கள் சுதந்திர தினமான நேற்று முன்தினம் தொடங்கியது. திருச்சி சிறையில் காவலர் பேச்சிமுத்துக்குமார், ஆயுள்தண்டனைக் கைதி எபினேசர் ஆகியோர் தண்டனைக் கைதிகளுக்கும், காவலர் கணே சன், ஆயுள் தண்டனைக் கைதி புஷ்பகுமார் ஆகியோர் விசார ணைக் கைதிகளுக்கும் யோகா பயிற்சி அளித்தனர்.

இதுபற்றி திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறும்போது, “கைதிகளின் உடல் நிலை மற்றும் மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள் வதற்காக யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

காவலர்கள், கைதிகள் மூலம் யோகா பயிற்சியளிக்கும் திட்டம் சுதந்திர தினத்தன்று சிறைத் துறை தலைவர் திரிபாதி உத்த ரவின்பேரில் தொடங்கப்பட்டுள் ளது. இதன்மூலம் இனிமேல் தடையின்றி அனைத்து சிறைகளி லும் யோகா பயிற்சி தொடர்ந்து நடைபெறும்.

இனிவரும் காலத் தில் எந்தவொரு தனியார் யோகா பயிற்சி மையத்தினரையும் சிறைக் குள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT