பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு கரோனா?- பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி

செய்திப்பிரிவு

சென்னையில் மண்டல ரீதியாக எத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 690 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மண்டல ரீதியாக எத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.8) வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 4 பேருக்கும், மாதவரம் மண்டலத்தில் 3 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 40 பேருக்கும், திருவிக நகர் மண்டலத்தில் 22 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உள்ளது.

அண்ணா நகர் மண்டலத்தில் 15 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 19 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 4 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது.

ஆலந்தூர் மண்டலத்தில் 2 பேருக்கும், அடையார் மண்டலத்தில் 4 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 5 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் கரோனா பாதிப்பு இல்லை.

மண்டல வாரியாக பட்டியல்
SCROLL FOR NEXT