கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், திண்டுக்கல் மாவட் டத்தைச் சேர்ந்த 45 பேர், நாமக் கல் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேர் என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 96 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
ஆனால், 110 மருத்துவர் பணியிடங்களுடன் கூடிய இம் மருத்துவமனையில் விடுப்பு உள் ளிட்ட காரணங்களால் 100-க்கும் குறைவான மருத்துவர்களே பணி யில் உள்ளனர். இவர்களில், ஒரு ஷிப்ட்டுக்கு 20 மருத்துவர்கள் வீதம் 3 ஷிப்டுகளில் 65 மருத் துவர்கள் பணியாற்றி வருகின் றனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பணிச்சுமையைக் குறைக்கும் விதமாக கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மத்தியில் உள்ளது.
இதுகுறித்து கேட்டபோது, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸி வெண்ணிலா கூறியது: கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் மருத்துவர்களின் தேவை குறித்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.