சிவாஜி கணேசனுக்கு மணிமண்ட பம் கட்டப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக தலைவர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் வரு மாறு:
ஈவிகேஎஸ் இளங்கோவன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்)
300க்கும் மேற்பட்ட திரைப்படங் களில் நடித்து, இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வேடங்களை ஏற்று உணர்ச்சிபூர்வமாக நடித்த சிவாஜிக்கு அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய இணை அமைச்சர்)
சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப் படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை வரவேற்கிறேன்.
ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்)
தன் நடிப்புத் திறமையால் உலகம் முழுவதும் வாழும் தமிழர் கள் மனதில் நீங்கா இடம் பிடித் திருப்பவர் சிவாஜி கணேசன். அவரின் நினைவைப் போற்றும் வகையில் மணி மண்டபம் கட் டப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சிக் குரியது.
திருநாவுக்கரசர் (காங்கிரஸ் தேசிய செயலாளர்)
சிவாஜிக்கு நினைவு மணி மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்புக் குரியது. அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அரசே இதை கட்ட முன்வந்துள்ளமைக்கு நன்றி.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி:
சிவாஜி கணேசனுக்கு மணிமண் டபம் அமைக்க 2002-ல் நடிகர் சங்கத்துக்கு இடம் ஒதுக்கித் தந்த முதல்வர், தற்போது அதே இடத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரபு
எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட் டப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வருக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பிலும், ரசி கர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் கமல்
நடிகர் திலகத்தை மரியாதையு டன் நினைவுகூர்ந்ததில் அரசு, நடிகர் இனத்துக்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி.
நடிகர் விஷால்
2002-ம் ஆண்டு சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. தமிழக அரசே அந்த நிலத்தில் மணிமண்டபம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கே.சந்திரசேகரன் (நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர்)
தமிழக அரசு சார்பிலேயே சிவாஜி கணேசனுக்கு மணிமண் டபத்தை அமைக்க வேண்டு மென்று கடந்த 10 ஆண்டுகளாக கோரிவந்தோம். எங்களின் கோரிக் கையை ஏற்று சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவிக்கிறோம்.