மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம் (75) என்ற மரைக்காயர். இவர் கருப்பாயூரணி பஜாரில் இறைச் சிக்கடை நடத்தினார். இவரது மருமகன் ஷாஜகானும் கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளார்.
நேற்று காலை பஜார் பகுதியில் போலீஸார் ரோந்து சென்றபோது, ஷாஜகானிடம் இறைச்சிக்கடை நடத்தக் கூடாது என எச்சரித்தனர். அப்போது வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. அங்கு வந்த அப்துல்ரகீம், தனது மருமகனை சத்தம் போட்டு அழைத்துச் சென்றார். இந்நிலையில், திடீ ரென அப்துல்ரகீம் மயங்கி விழு ந்தார். அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸை கண்டித்து உறவினர்கள் கருப் பாயூரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் கூறுகையில், அவர்களை சத்தம் போட்டோம். வேறெதுவும் செய்யவில்லை. சந்தேகம் இருந்தால் புகார் தருமாறு தெரிவித்தோம். நாங்களே அடக்கம் செய்து கொள்கிறோம். பிரேதப் பரி சோதனை வேண்டாம் என உறவினர்கள் எழுதிக் கொடுத்து விட்டனர் என்றனர்.