தமிழகம்

ராஜபாளையத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து, ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நகராட்சி நிர்வாகத்தோடு தன்னார்வ அமைப்பினரும் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள சம்மந்தபுரம் மற்றும் வடக்கு ஆண்டாள்புரம் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க பெருநகரங்களைப் போன்று ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் பெங்களூரிலிருந்து புதியதாக ட்ரோன் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் இன்று காலை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, நாளைமுதல் கொரோனா பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நகராட்சியில் 42 வார்டுகளிலும் பெரிய கட்டிடங்களிலும் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT