அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
அப்போது இலுப்பையூரணியில் உள்ள பொட்டலூருணியை தூர்வாரி கரையை மேம்படுத்த வேண்டும். இதிலிருந்து மறுகால் பாயும் தண்ணீரை கால்வாய் வெட்டி நெடுங் குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பொட்டலூருணி அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.
பின்னர் பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார். மந்தித்தோப்பு ஊராட்சி நரிக்குறவர் காலனியில் உள்ள மக்களுக்கு விலையில்லா மளிகைப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.