சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ.1,000, உணவுப் பொருட்களை பொன்னம்பல அடிகளார் வழங்கினார். மேலும் அரசு நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கினார்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கால் கிராமமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். கிருமி நாசினி தெளிப்பது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதினம் சார்பில் பொன்னம்பல அடிகளார் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1,000 வழங்கினார். மேலும் அவர்களுக்கு தேவையான அரிசி, சோப்பு, முககவசம் போன்ற பொருட்களையும் விநியோகித்தார்.
மேலும் பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.3 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் வழங்கினார்.