தமிழகம்

ஆன்லைன் காணொலி மூலம் வண்டலூர் விலங்கியல் பூங்காவைக் காணலாம்: தினமும் 12 மணியிலிருந்து 4 மணி வரை ஒளிபரப்பு

செய்திப்பிரிவு

ஊரடங்கினால் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு பொழுதுபோக்குக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சமுதாயத் தனிமையில் இருக்கும் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளனர்.

அவ்வாறு முடங்கிக் கிடக்கும் மக்கள் வழக்கமான பொழுதுபோக்கு சேனல்கள், செல்போன் விளையாட்டுகள், வாட்ஸ் அப், யூடியூப் என தினம் தினம் பார்த்துச் சலித்துப் போயுள்ள பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கெனவே வண்டலூர் பூங்காவில் ஆன்லைன் மூலம் அங்கு நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மிருகங்களைக் கண்டுகளிக்கும் முயற்சி இருந்தது. ஆனாலும் அது நடைமுறையில் பொதுமக்களால் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு உள்ளதால் பொதுமக்கள் காணும் வகையில் பூங்கா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தினமும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை குறிப்பிட்ட விலங்குகளைக் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை https://www.aazp.in/live-streaming/ என்கிற இணையதளத்தில் காணலாம். இது தவிர இதற்கென உள்ள செயலியை ட்வுன்லோடு செய்து அதன் மூலமும் காணலாம்.

SCROLL FOR NEXT