தமிழகம்

மதுபாட்டில்கள் திருட்டைத் தடுக்க சரக்குகளை பெரிய ஹாலுக்கு மாற்றிய திருச்சி மாநகராட்சி

செய்திப்பிரிவு

நாடு முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன் நடைமுறையில் இருப்பது மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. இதனையடுத்து திருச்சியில் சில தினங்களுக்கு முன்பாக 2 டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு சரக்குகள் திருடப்பட்டன.

இதனையடுத்து மதுபாட்டில்களை ‘குடி’மகன்களிடமிருந்து பாதுகாக்க திருச்சி மாநகராட்சி அனைத்து மதுபாட்டில்களையும் ஒரே இடத்துக்கு மாற்றி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட முடிவெடுத்தது.

திருச்சியில் 180-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தச் சரக்குகளை டாஸ்மாக் கிட்டங்கியில் வைக்க இடமிருக்காது என்பதால் அங்கு மெயின்காட் கேட் பகுதியில் உள்ள தேவர் ஹால் என்ற பெரிய ஹாலில் சரக்குகளை வைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இந்த முடிவைத் தொடர்ந்து கடந்த இருநாட்களாக மதுபாட்டில்கள் கடைகளிலிருந்து பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டு தேவர் ஹாலில் சேர்க்கப்பட்டன. இந்த தேவர் ஹாலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களும், டாஸ்மாக் ஊழியர்களும் பாதுகாவலில் இருக்கின்றனர்.

SCROLL FOR NEXT