தமிழகம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக காலால் ஓவியம் வரைந்த மாணவியின் கின்னஸ் சாதனை முயற்சி

செய்திப்பிரிவு

அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதி யைச் சேந்தவர்கள் ரமேஷ்பாபு- ஆண்டாள் தம்பதியினர். இவர்களது மகள் காவியா. அம்பத்தூர், புதூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமுடைய காவியாவின் மனதில், சுற்றுச்சூழல் மாசுபடு வதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். அத்துடன் அதை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யவும் அவர் விரும்பினார்.

இதன்படி, தான் படிக்கும் பள்ளி வளாகத்தில் கடந்த இரு நாட்களாக 100 சதுர மீட்டர் பரப்பளவில், காலால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து ஓவியம் வரைந்தார். அதில், கடல் நீர் எவ்வாறு மாசுபடுகிறது, தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேறும் புகை மற்றும் கழிவுகள், குடியிருப்புகளால் கொட்டப்படும் குப்பைகள், ஒலி பெருக்கியினால் ஏற்பாடும் ஒலி மாசு போன்றவற்றை விரிவாக விளக்கும் வகையில் ஓவியங்கள் வரைந்துள்ளார்.

மரம் வளர்ப்போம்.. சுற்றுச் சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஓவியங் களை வரைந்து பார்வையாளர் களை அசத்தியுள்ளார். இந்த கின்னஸ் சாதனை முயற்சியை, கின்னஸ் நிறுவன பிரதிநிதிகள், வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து, எடுத்துச் சென்றுள்ளனர்.

SCROLL FOR NEXT