தமிழகம்

கேள்வியும் பதிலும்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொடர்பான இடர்மிகுந்த சூழலில் வாசகர்கள் பலரும் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு எங்கே கிடைக்கும் என்ற தடுமாற்றத்தையும் வெளியிட்டபடி இருக்கிறார்கள். அவர்களின் கேள்விகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நிபுணர்களிடம் கொண்டு சென்று உரிய பதிலைப் பெற்றுத் தர தயாராகிறது ‘இந்து தமிழ் திசை’! இதோ இங்கே அப்படி சில கேள்வி - பதில்கள்...

நான் சிறு கடை வியாபாரி. எங்களிடம் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வந்தார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், அவர்களுக்கு வேறு வழி ஏதும் இல்லாததால் இப்போது நானே அவர்களை பராமரித்துவருகிறேன். தொடர்ந்து பராமரிக்கும் அளவுக்கு என்னிடம் பொருளாதார வசதியும் இல்லை; இடவசதியும் இல்லை. மேலும், வைரஸ் அச்சமும் இருக்கிறது. தொழிலாளர்களும் ஊருக்கு செல்லவே விரும்புகிறார்கள். அவர்களை ஊருக்கு அனுப்பவோ அல்லது அரசு பராமரிப்பில் ஒப்படைக்கவோ வாய்ப்பு உள்ளதா?

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும் பதில்:

சென்னையில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலர்களை தொடர்புகொண்டு, அவர்களின் தேவையை தெரிவிக்கலாம். உணவு மற்றும் தங்குமிடம் (தேவைப்பட்டால்) அவர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும். மண்டல அலுவலர்களின் கைபேசி எண்கள் விவரம்:

மண்டலம் 1 – 9445190001, மண்டலம் 2 – 9445190002, மண்டலம் 3 – 9445190003, மண்டலம் 4 – 9445190004, மண்டலம் 5 – 9445190005, மண்டலம் 6 – 9445190006, மண்டலம் 7 – 9445190007, மண்டலம் 8 – 9445190008, மண்டலம் 9 – 9445190009, மண்டலம் 10 – 9445190010, மண்டலம் 11 – 9445190011, மண்டலம் 12 – 9445190012, மண்டலம் 13 – 9445190013, மண்டலம் 14 – 9445190014, மண்டலம் 15 – 9445190015.

எனது மனைவி ஒரு செவிலியர். தற்போதைய சூழல் கருதி அவருக்கு கட்டாயப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. அவரோ ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர். இச்சூழலில் அவர் பணிக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று கருதுகிறோம். எனவே, அவருக்கு மருத்துவ விடுப்பு அனுமதிக்கப்படுமா?

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும் பதில்:

தற்போதைய சூழல் கருதி மருத்துவத் துறையில் இம்மாதம் ஓய்வுபெறுவோருக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா தொந்தரவு இருப்பின், அதற்குண்டான மருத்துவச் சான்றுடன் கோரிக்கையை சமர்ப்பித்தால் பரிசீலிக்கப்படும்.

வாசகர்களே…!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் எதற்கு விதிவிலக்கு உண்டு; என்னென்ன செயல்களில் ஈடுபட அனுமதி கிடைக்கும்; எதனைச் செய்யலாம் அல்லது எதனைச் செய்யக் கூடாது என்பதில் உங்களுக்கும் இதுபோன்ற பல சந்தேகங்கள் இருக்கலாம். உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு கேள்வியாக அனுப்பினால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அல்லது நிபுணர்களின் பதில்களுடன் பிரசுரம் செய்யப்படும்.

இதுபோன்ற சந்தேகங்களை வாசகர்கள் press.release@hindutamil.co.in என்ற மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பலாம். மேலும் 044-42890002 என்ற ‘உங்கள் குரல்’ எண் வழியாகவும் கேட்கலாம்.

SCROLL FOR NEXT