டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக் கோரி போட்டித் தேர்வெழுதும் இளைஞர்கள் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அப்துல் கலாம் நினைவு ரத்த தான முகாம் நடந்தது. தமிழக குரூப்-1 தேர்வர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர்.
இதுகுறித்து அந்த கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் தேன் மொழி கூறும்போது, “கேரளா, குஜராத், ஹரியானா, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உள்ளது.
தமிழகத்திலும் இதேபோன்று குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும். எங்களின் இந்த கோரிக்கையை முதல்வரின் மேலான கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக அப்துல் கலாம் நினைவு ரத்த தான முகாமை நடத்தினோம்” என்றார்.