செங்காடு கிராமத்தில் முகாமிட்டுள்ள மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநில கட்டுமான தொழிலாளர்களுக்கு, திமுக எம்எல்ஏ இதயவர்மன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 
தமிழகம்

வடமாநில தொழிலாளருக்கு திமுக எம்எல்ஏ உதவி

செய்திப்பிரிவு

சென்னை புறநகர் பகுதியில் கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, திமுக எம்எல்ஏ. இதயவர்மன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் தங்கியிருக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர், சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் 144 தடை உத்தரவு காரணமாக, சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் தவித்து வந்துள்ளனர்.

இதையறிந்த திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் தலைமையிலான திமுக நிர்வாகிகள், செங்காடு கிராமப்பகுதிக்கு நேரில் சென்று மேற்கு வங்க தொழிலாளர்கள் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினர்.

மேலும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவினர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதயவர்மன், வருவாய்த் துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT