காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பொதுமக்கள் நேற்று அதிக அளவில் குவிந்தனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அத்தியாவசியமான உணவகங்கள், காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மீன் கடைகள் குறைந்த அளவே செயல்படுகின்றன.
இந்நிலையில், நேற்று ஞாயிற் றுக்கிழமை என்பதால், இறைச்சி, மீன் கடைகளுக்கு அதிகாலை 4 முதல் காலை 10 மணிவரை அதிக அளவில் பொதுமக்கள் வந்து வாங்கிச் சென்றனர். பெரும் பாலான கடைகளில், மக்கள் சமூக இடைவெளிவிட்டு, நீண்டநேரம் காத்திருந்து வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.
அதேநேரம், வெளி மாநிலங் களில் இருந்து, ஆடு வரத்து இல்லாததால், திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் கோழி இறைச்சி மட் டுமே விற்பனையாயின. இதில், ஆட்டிறைச்சி நேற்று கிலோ ரூ.800 முதல் 900 வரை விற்பனையானது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 அம்மா உணவகங்கள் மூலம், கடந்த 4 நாட்களாக நாள்தோறும் 1,500 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று பரவல்தடுப்புக்காக அரசின் நடவடிக்கை களுக்காக திமுக எம்எல்ஏக்கள் ஆலந்தூர் தா.மோ. அன்பரசன், பல்லாவரம் இ. கருணாநிதி, திருப்போரூர் எல்.இதயவர்மன், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந் திரன் ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து, பரிந்துரை கடிதங்களை மாவட்ட ஆட்சியர்களிடம் நேற்று முன்தினம் அளித்துள்ளனர்.